தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அருண்விஜய் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவுள்ள திரைப்படம் பார்டர். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் பார்டர் திரைப்படம் வருகிற நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

மேலும் மூடர்கூடம் பட இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னிச்சிறகுகள் திரைப்படமும் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது. இதனை அடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனரான ஹரி இயக்கத்தில் யானை படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அருண் விஜய்.

யானை படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார் ஒரு யானை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் யானை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் தன்பகுதி காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் மொத்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.