காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.கடைசியாக இவர் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசானது.

Queen Season 2 Script Works are On GVM

இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் பப்பி படத்தின் நாயகன் வருண் நடிக்கும் ஜோசுவா என்ற படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கெளதம் மேனன் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார்.

Queen Season 2 Script Works are On GVM

ரம்யா கிருஷ்ணன்,அஞ்சனா ஜெயபிரகாஷ்,அனிகா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்த தொடரின் முதல் சீசன் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது சீசன் வேலைகள் தொடங்கியுள்ளது என்றும் கதை எழுதும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்றும் கெளதம் மேனன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

Queen Season 2 Script Works are On GVM