கன்னடத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஸ்ரேயா அஞ்சன்.இதனை அடுத்து கன்னடத்தில் ஒளிபரப்பான சில தொடர்களில் நடித்து சின்னத்திரையில் தனது என்ட்ரியை கொடுத்தார் ஸ்ரேயா அஞ்சன்.இவற்றின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் ஸ்ரேயா அஞ்சன்.

அடுத்தாக சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான நந்தினி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ஸ்ரேயா அஞ்சன்.இதனை தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஹீரோயினாக நடித்தார் ஸ்ரேயா அஞ்சன்.தனது நடிப்பால் பல ரசிகர்களை பெற்றார் ஸ்ரேயா அஞ்சன்.

இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.இதனை அடுத்து அன்புடன் குஷி தொடரில் சில மாதங்கள் நடித்தார் ஸ்ரேயா அஞ்சன்.திருமணம் தொடரில் தன்னுடன் நடித்த சிந்துவுடன் காதல் மலர்ந்து அவரை கடந்த நவம்பர் 21 அன்று கரம்பிடித்தார் ஸ்ரேயா.

திருமணத்துக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.தற்போது இந்த தொடரில் புது புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் பார்வதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவலை ஒரு ப்ரோமோவுடன் ஜீ தமிழ் தெரிவித்துள்ளனர்.