செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கியவர் அனுஷ்யா.அதன் பின்னர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக உயர்ந்தார்.இவர் தொகுத்து வழங்கிய ஜபர்தஸ்த் என்ற தொடர் பெரிய வெற்றியை பெற தெலுங்கு சின்னத்திரையின் முன்னணி தொகுப்பாளினியாக உயர்ந்தார் அனுஷ்யா.இந்த தொடரின் மூலம் இவருக்கு ஏராளாமான ரசிகர்கள் கிடைத்தனர்.

இந்த தொடரில் ஆட்டம்,காமெடி என்று அனைத்திலும் கலக்கிய அனுஷ்யா விரைவில் தெலுங்கில் கனவுக்கன்னியாக உயர்ந்தார்.இந்த தொடரில் இவருக்கு கிடைத்த ரீச் இவருக்கு பல சினிமா வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்தது.தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த  Soggade Chinni Nayana என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து Kshanam என்ற படத்தில் வில்லியாக மிரட்டிய இவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி நடிகையாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.இதனை தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம்,அல்லு அர்ஜுனின் புஷ்பா படஙக்ளில் நடித்து பிரபலமான நடிகையாகவும் மாறினார்.

அனுஷ்யா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பவர்.இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு,வீடியோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் அள்ளும்.நடனத்திலும் அசத்தும் இவர் அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.தற்போது தனது கணவருடன் லிப்லாக் முத்தமிடுவது போல ஒரு வீடீயோவை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.