கைதி, தம்பி போன்ற படங்களுக்கு பிறகு கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ரெமோ பட புகழ் பாக்கியராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இந்த படத்தில் சதிஷ், பொன்னம்பலம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப் வில்லன் கருடா ராம் இதில் வில்லனாக நடிக்கிறார். 

Producer SR Prabhu Clarifies About Sulthan Rumour

இந்நிலையில் சமூக வலைதளங்களில் சுல்தான் படம் குறித்த தவறான அப்டேட்டுகள் வெளியாகின. சுல்தான் திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகவுள்ளதாகவும், இது காஷ்மோரா போல ஃபேன்டஸி திரைப்படம் எனவும் கூறப்பட்டது. 

Producer SR Prabhu Clarifies About Sulthan Rumour Producer SR Prabhu Clarifies About Sulthan Rumour

தற்போது படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், சுல்தான் திரைப்படம் பற்றி கூறப்படும் இது போன்ற தகவல்கள் எதுவுமே உண்மையில்லை என போட்டுடைத்தார். தயாரிப்பாளரின் இந்த அசத்தல் ட்வீட் மூலம், சுல்தான் திரைப்படம் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கப்பட்டுள்ளது.