மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். வித்யாசமான கதைகளம் விறுவிறுப்பான காட்சியமைப்புகள் என மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற மாநகரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டாவது திரைப்படம் கைதி. 

பாடல்கள் கிடையாது கதாநாயகி கிடையாது கதாநாயகனுக்கு ஆரம்ப காட்சி என்று பஞ்ச் வசனங்கள் பேசும் காட்சிகள் கிடையாது ஆனாலும் திரைப்படம் மாஸ் வெற்றி பெற்றது. ஒரு இரவில் கிட்டத்தட்ட ஒரு நான்கு மணி நேரத்திற்குள் நடக்கும் சில நிகழ்வுகளை ஒன்றிணைத்து ஒரு திரைக்கதையை உருவாக்கி  ரசிகர்கள் அனைவரையும் இருக்கையை விட்டு நகர முடியாத அளவுக்கு காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு ஏற்படுத்தி  அசத்தியிருந்தார். 

கைதி படத்தில் கதாநாயகனாக நடித்த கார்த்தியின் கதாபாத்திரமும்  நடிப்பும் கட்சிதமாக கதையோடு ஒன்றி இருந்தது. சத்தியன் சூரியனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமும் பிரம்மாண்டமாகவும் யதார்த்தமாகவும் அமைந்தது.சாம்.C.S-ன் இசை  திரைக்கதையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ரசிக்க வைத்தது. 

திரைப்படத்தின் இறுதிக் காட்சியில்  இரண்டாம் பாகம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கைது திரைப்படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பிற்காக பலரும் காத்திருந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர்S.R.பிரபு அவர்கள் ட்விட்டர் SPACES-ல்  இது குறித்து பரபரப்பான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். 

கைது திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கட்டாயமாக வரும் என்பதை ட்விட்டர் SPACES-ல்  தற்போது தெரிவித்துள்ளார். கைதி 2 திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் வெளியிட்ட இந்த தகவல் சமூக வலைதளங்களில்  தற்போது ட்ரெண்டாகி வருகிறது.