கடந்த 2012-ம் ஆண்டு வெளியான சகுனி திரைப்படத்தை தயாரித்து தமிழ் திரையுலகின் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவராக தன்னை உயர்த்தி கொண்டவர் எஸ்.ஆர். பிரபு. ஜோக்கர், காஷ்மோரா, அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கூட்டத்தில் ஒருவன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். 

கடந்த ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான NGK படத்தை தயாரித்திருந்தார். அதைத்தொடர்ந்து சென்ற வருடம் வெளிவந்த கைதி திரைப்படம் மிக பிரம்மாண்ட ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படத்தை எடுத்து வருகிறார் எஸ்.ஆர்.பிரபு. 

இந்நிலையில் எஸ்.ஆர். பிரபு ட்விட்டர் பக்கத்தில், உங்களது நம்பரில் இருந்து உங்களுக்கே மிஸ்டு கால் வந்திருக்கிறதா? உங்களது நண்பர்கள் போன் செய்து உங்களிடமிருந்து மிஸ்டு கால் வந்தது என கூறியது உண்டா?, நேற்றிலிருந்து எனக்குத் தெரிந்த இரண்டு நபர்களுக்கு இது நடந்து கொண்டிருக்கிறது. இது நெட்வொர்க் பிரச்சனையா அல்லது மோசடி வேலையா. 

மிகவும் பயங்கரமாக இருக்கிறது என எஸ்ஆர் பிரபு குறிப்பிட்டிருக்கிறார். சைபர் க்ரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இப்படி தொடர்ந்து அவர்கள் போனுக்கு அவர்கள் எண்ணில் இருந்தே அழைப்பு வருகிறது என கூறி வருவது பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடிகர் சரத்குமார் சென்னை சைபர் க்ரைம் போலீசில் ஒரு புகார் அளித்து இருந்தார். அதில் தன்னுடைய நம்பரில் இருந்தே தனக்கு போன் கால் வந்தது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
சரத்குமாரின் போன் நம்பர் போலியாக உருவாக்கிய ஒரு நபர் அதிலிருந்து மற்ற பிரபலங்கள் பலருக்கும் போன் செய்து இருக்கிறார் அப்படி சரத்குமார் குரலில் அவர்களிடம் பேசி இருக்கிறார். சரத்குமாரை தொடர்ந்து எஸ்.ஆர். பிரபு இப்படி கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எஸ் ஆர் பிரபு செய்த பதிவின் கீழ், அவர் தயாரித்து வரும் சுல்தான் படத்தின் அப்டேட் தாங்கள் என கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கே.ஜி.எஃப் புகழ் கருட ராம் இதில் முக்கிய ரோலில்  நடிக்கிறார்.