“இன்னும் ஒரு வாரத்துல.. தளபதி 67 அப்டேட்..” – அட்டகாசமான அறிவிப்பு .. வைராலகி வரும் வீடியோ இதோ..

தளபதி 67 குறித்து தயாரிப்பாளர் லலித் குமார் -  Producer Lalith kumar about thalapathy 67 update | Galatta

பொங்கலையொட்டி வெளியான தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படம் தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் வாரிசு திரைப்படம் தற்போது உலகளவில் 210 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 67' திரைப்படத்தை  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். முன்னதாக இந்த கூட்டணியில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணிக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

மேலும் லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான 'விகரம்' திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து LCU என்ற பிரிவை உருவாக்கி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அதன் பின் அவரது  LCU  பிரிவில் பல படங்களை இயக்கவுள்ளார். ஏற்கனவே LCU பிரிவில் உலகநாயகன் கமல் ஹாசன், சூர்யா, கார்த்தி, பாஹத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் இருக்கையில் மேலும் ஒரு உச்ச நட்சத்திரத்தை இணைக்க திட்டமிட்டு தளபதி விஜயுடன் இணைந்துள்ளார். மிகப்பெரிய எண்ண ஓட்டத்துடன் உருவாகி வரும் LCU விற்கு இன்று இந்தியளவில் பெரும் ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.மேலும் தளபதி விஜயுடன் பணியாற்றி வரும் தளபதி 67 திரைப்படம் LCU  பிரிவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து தளபதி 67 படத்திற்கு கூடுதலாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மற்றும் பீஸ்ட் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்  மனோஜ் பரமஹம்சா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மேலும் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தில் திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தில் பல பிரபல நட்சத்திரங்களை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் 50 வயது டானாக நடித்துவருகிறார். குடும்பத்திற்காக பழி வாங்கும் கதையாக உருவாகும் என்று பல தகவல்கள் ரசிகர்களிடையே எழுந்து வரும் நிலையில் ரசிகர்கள் தளபதி 67 குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட்டுகளை படக்குழுவிடம் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரிடம் தளபதி 67 குறித்தஅப்டேட்களை பத்திரிக்கையாளர்  கேட்ட பொழுது அவர் ‘தளபதி 67 குறித்த அப்டேட் விரைவில் சரியான நேரத்தில் வரும், சரியா பத்து நாளில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும்' என்று குறிப்பிட்டார்.

"வாரிசு" வசூல் மற்றும் "தளபதி 67" அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் லலித்.#Varisu #ThalapathyVijay #Thalapathy67 #VarisuPongal #VarisuHits210crs #LokeshKanagaraj #Vamshi #Vjjay #DilRaju #VamshiPaidipally #Lalit #Thalapathy67Update pic.twitter.com/heALlkAmnJ

— Galatta Media (@galattadotcom) January 18, 2023

இதனையடுத்து தளபதி ரசிகர்கள்‌ மற்றும் லோகேஷ் கனகராஜ் ன் LCU ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.‌ மேலும் தயாரிப்பாளர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வசூலை அள்ளி குவிக்கும் ஆட்டநாயகன் விஜய் – வாரிசு படக்குழு அறிவித்த 7 நாள் வசூல் விவரம்.. ரசிகர்கள் வைரலாக்கி வரும் பதிவு இதோ..
சினிமா

வசூலை அள்ளி குவிக்கும் ஆட்டநாயகன் விஜய் – வாரிசு படக்குழு அறிவித்த 7 நாள் வசூல் விவரம்.. ரசிகர்கள் வைரலாக்கி வரும் பதிவு இதோ..

‘இது எப்படி இருக்கு..’ - ஜெயிலர் படத்தில் இணைந்த புஷ்பா பட நடிகர்.. அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை களமிறக்கும் நெல்சன்
சினிமா

‘இது எப்படி இருக்கு..’ - ஜெயிலர் படத்தில் இணைந்த புஷ்பா பட நடிகர்.. அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை களமிறக்கும் நெல்சன்

நாடோடி மன்னனாக தனுஷ் – வாத்தி இரண்டாவது பாடலில் surprise entry கொடுத்த ஜிவி பிரகாஷ்.. வைரலாகி வரும் பாடல் இதோ..
சினிமா

நாடோடி மன்னனாக தனுஷ் – வாத்தி இரண்டாவது பாடலில் surprise entry கொடுத்த ஜிவி பிரகாஷ்.. வைரலாகி வரும் பாடல் இதோ..