ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள திரைப்படம் சைலன்ஸ். இப்படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் மாதவன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ரெண்டு படத்திற்கு பிறகு இப்படத்தில் தான் அனுஷ்கா மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ளனர். 

Producer Kona Venkat Clarifies On Silence Release

இவர்களோடு அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு, மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் கலந்த கிரைம் த்ரில்லர் படமாக தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது இப்படம். படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. 

Producer Kona Venkat Clarifies On Silence Release Producer Kona Venkat Clarifies On Silence Release

தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்து தெளிவு செய்தார் தயாரிப்பாளர் கோனா வெங்கட். அவரது ட்விட்டர் பக்கத்தில், சைலன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸில் ஏராளமான யூகங்கள் செய்யப்படுகின்றன. படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதே எங்கள் முக்கிய நோக்கம். இதே நிலைமை நீடித்தால் படத்தை OTT-ல் வெளியிடுவது பற்றி யோசிக்கலாம். காத்திருக்கலாம் நல்லதே நடக்கும் என்று பதிவு செய்துள்ளார்.