தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துவங்கி இன்று கோலிவுட்டின் நட்சத்திரமாய் ஜொலிப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது நடிப்பால் ஈர்த்து SKவாக திகழ்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த காலத்திலே பலருக்கும் ஹீரோவாக திகழ்ந்த சிவகார்திகேயன், ஹீரோவாகி பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். தற்போது டாக்டர் மற்றும் அயலான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் SK ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அறிமுகமாகிறார். வினய், யோகிபாபு ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்த டாக்டர் படத்தின் செல்லம்மா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலின் வரிகள் இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக அமைந்தது. டிக்டாக் பேன் செய்த நேரத்தில் சரியாக வந்து அமைந்தது இந்த பாடல். 

டிஜிட்டல் காலத்து ரொமான்ஸை கண்முன் கொண்டு வந்துள்ளனர் படக்குழுவினர். நடிகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி ஒரு சில படங்களில் அவ்வப்போது பாடல்களும் எழுதி வருகிறார் சிவகார்த்திகேயன். கவிஞர் SK தலைகாட்டினால் இளைஞர்களுக்கு கொண்டாட்டம் என்றே கூறலாம். கோலமாவு கோகிலா படத்தில் இவர் எழுதிய கல்யாண வயசு தான் பாடல், ரசிகர்களின் பிலேலிஸ்ட்டை ரூல் செய்து வருகிறது. 

தற்போது டாக்டர் படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளதென படக்குழுவில் உள்ள கலையரசு பதிவு செய்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் நெல்சனிடம் விசாரிக்கையில், போஸ்ட் ப்ரோடக்ஷன் பணியோ அல்லது ஷூட்டிங்கோ இல்லை. படம் குறித்த திட்டங்களை தீட்டவும், படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு தேவையான வேலை பற்றியும் முடிவு செய்வதற்காக அப்படி ஓர் பதிவு என்று விளக்கியுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Back to work after a long time. Feels so good. #workmode #doctor #sivakarthikeyanproductions

A post shared by Kalai Arasu (@kalai_arasu_p) on