விஜய் ஆண்டனிக்கு என்ன ஆனது?.. இப்போ அவர் உடல்நிலை எப்படி இருக்கு?.. – தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல் இதோ..

விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் - Producer Dhananjayan about vijay antony health condition | Galatta

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் விஜய் ஆண்டனி. மேலும் வித்யாசமான ஜிப்ரிஷ் இசையில் ஒலிக்கும் இவரது பாடல்களுக்கு தனி ரசிகர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 40 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனி 'நான்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல  திரைப்படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

மேலும் 'அக்னி சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', 'மழை பிடிக்காத மனிதன்', 'வள்ளி மயில்' போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இசை, நடிப்பு மட்டுமல்லாமல் சமீபத்தில் அவர் படங்களுக்கு அவரே படத்தொகுப்பும் செய்து வருகிறார். ,மேலும் தற்போது அவர் நடித்து வரும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை அவரே இயக்கியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் பன்முகத்திறன் கொண்ட விஜய் ஆண்டனி திரையில் மட்டுமல்லாமல் பொதுவெளியிலும் சமூக கருத்துக்களை அவ்வப்போது பதிவிட்டு வருபவர்.

இந்நிலையில் பிச்சைக் காரன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் படபிடிப்பு தற்போதுமும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் படபிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனி கடும் விபத்துக்குள்ளானர் என்ற செய்தி வைரலாக பரவியது. இதனையடுத்து திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்

இந்நிலையில் விஜய் ஆன்டணியின் உடல் நலம் குறித்து தனஞ்செயன் அவர்கள் நமது கலாட்டா மீடியா பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர், “இரண்டு நாள் முன்பு பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் பாடல் பதிவின் போது விஜய் ஆண்டனியும் கதாநாயகி காவ்யா தாப்பரும் படகில் சென்று கொண்டிருந்தார்கள்.‌ திடீரென்று படகு கட்டுபாடை இழந்து மோதி விட்டது . மோதிய வேகத்தில் தண்ணீரில் விழுந்து விட்டார். விஜய் ஆண்டனிக்கு நீச்சல் தெரியாததால் நிறைய தண்ணீரீ குடித்து விட்டார். பின் குழுவினர் உடனே அவரை  காப்பாற்றினார். கதாநாயகிக்கு லேசான காயம் தான்.  படகில் மோதியதால் உதடு மற்றும் பற்களில் காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் குணமடைந்து விட்டார். உதட்டில் ஏற்பட்ட காயத்தினால் தற்போது அவரால் பேச முடியாது. ஆனால் அவர் இப்போது பிச்சைக்காரன் 2 படத்தை மருத்துவமனையில் இ ருந்து கொண்டே எடிட் செய்து வருகிறார். அங்கு மருத்துவமனையில் இருப்பவர் என்னிடம் விஜய் ஆண்டனி பற்றி சொன்னார்கள் ‘இந்த மாதிரி மன உறுதி கொண்ட மனிதரை நான் பார்த்ததில்லை’ என்று சொன்னார்கள். விஜய் ஆண்டனி ஒரு வாரத்தில் குணமடைந்து விடுவார் என்று படக்குழுவில் இருந்து தெரிவித்தனர்” என்று குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் தற்போது விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன், கொலைகாரன், காக்கி ஆகிய படங்களின் இணை தயாரிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனஞ்செயன் நமது கலாட்டா  மீடியாவில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..  

“ஒரு ஆளுக்கு அடிபட்டுதான் 100 நாள் படம் ஓடனும்னு அவசியம் இல்ல' - துணிவு படப்பிடிப்பில் டென்ஷன் ஆன அஜித்..
சினிமா

“ஒரு ஆளுக்கு அடிபட்டுதான் 100 நாள் படம் ஓடனும்னு அவசியம் இல்ல' - துணிவு படப்பிடிப்பில் டென்ஷன் ஆன அஜித்..

நடிகர் வடிவேலு தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்  - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. ஆறுதல் தெரிவித்து வரும் பிரபலங்கள், ரசிகர்கள்..
சினிமா

நடிகர் வடிவேலு தாயார் உடல்நலக் குறைவால் காலமானார் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. ஆறுதல் தெரிவித்து வரும் பிரபலங்கள், ரசிகர்கள்..

“இந்த பதிவு துணிவு படத்துடன் ஒப்பீடு அல்ல..” – வாரிசு பாடலாசிரியர் விவேக்கின் பதிவு வைரல்..
சினிமா

“இந்த பதிவு துணிவு படத்துடன் ஒப்பீடு அல்ல..” – வாரிசு பாடலாசிரியர் விவேக்கின் பதிவு வைரல்..