யார் Real winner வாரிசு?.. துணிவு?.. – உண்மையை உடைத்த தயாரிப்பாளர் தனஞ்செயன்.. சுவாரஸ்யமான தகவல் இதோ..

தயாரிப்பாளர் தனஞ்செயன் வாரிசு மற்றும் துணிவு பட வசூல் குறித்து விளக்கம் - Producer Dhananjeyan opens up Thunivu Varisu collections | Galatta

இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக தமிழ் திரையுலகில் வந்த இரண்டு படங்கள் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம். இரண்டு படங்களும் கொண்டாட்டங்களுடன் மிகப்பெரிய ஆதரவை பெற்று திரையில் ஓடிக் கொண்டிருக்கின்றது. விடுமுறை தினம் முடிந்தும் இரண்டு படங்களுக்கும் ஒரே மாதிரியான வரவேற்பு உலகளவில் கிடைத்து வருகிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் மற்றும் தயாரிப்பாளரான தனஞ்செயன் அவர்கள் நமது கலாட்டா மீடியா பேட்டியில் கலந்து கொண்டார். இதில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் மக்கள் வரவேற்பு மற்றும் வசூல் ரீதியான பாக்ஸ் ஆபிஸ் கேள்விகளுக்கு பதிலளிலளித்தார்.

இதில் துணிவு மற்றும் வாரிசு  ஆகிய இரண்டு படங்களில் யார்  இந்த பொங்கல் போட்டியில் வெற்றியாளர் என்ற கேள்விக்கு,  

அவர், "என்னை பொறுத்தவரையில் இரண்டு பேருமே real winner தான்.‌ உலகளவில் அவரவர் படங்களுக்கு என்ன வசூல் என்று தயாரிப்பாளருக்கு தான் சரியாக தெரியும்.‌ நம்ம யாருக்கும் அதைபற்றி துல்லியமா தெரியாது. தமிழ்நாடு பொறுத்தவரை கிட்டத்தட்ட இரண்டு படங்களும் 7 நாட்களில் 165 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. துணிவு படத்தை விட வாரிசு நுனியளவில் முன்னிலையில் உள்ளது. அதாவது 5 கோடி ரூபாய் வித்யாசம் இருக்கும். இதனால துணிவு படம் தோல்வி னு சொல்ல முடியாது. இந்த வித்தியாசம் போட்டியில் கணக்கு எடுத்து கொள்ள முடியாது. உண்மையான போட்டி என்று சொல்லப்போனால் 'விஸ்வாசம்' படமும் 'வாரிசு' படமும் ஒரே நேரத்தில் வந்திருந்தால் அது சரியான போட்டியாக இருந்திருக்கும். எப்பவும் அப்படி அமையாது. துணிவு படத்தை விட வாரிசு படத்திற்கான பட்ஜெட் 40, 50 கோடி வித்யாசம் இருக்கும். அப்போ துணிவு திரைப்படம் இந்த மாதிரி வசூல் படைச்சதுக்கு துணிவு படத்திற்கு வெற்றி தான்" என்று குறிப்பட்டார்.

மேலும் வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு வெளியீடான 'வாரசுடு' படத்தின் வரவேற்பு குறித்த அவர் பேசுகையில், “வாரசுடு திரைப்படம் விஜய் சார் திரைப்பயணத்தில் தெலுங்கு டப்பில் அதிக வசூல் படைத்த படமாக உள்ளது. இது எல்லாம் தில் ராஜ் சாருக்கு நல்ல வரவேற்பு தான்" என்றார்.

மேலும் துணிவு திரைப்படம் குறித்து, “துணிவு பெரிய பட்ஜெட் திரைப்படம் அல்ல. இரண்டு மூன்று செட்டுகளில் முடிக்கபட்ட படம். அஜித் சாரை தவிர மற்ற நடிகரெல்லாம் அஜித் சார் அளவு பிரபலமானவர் அல்ல.  இதுபோன்ற பட்ஜெட் குறைவான படத்திற்கு இவ்வளவு பெரிய வசூல் மிகப்பெரிய வெற்றிதான். தமிழ்நாட்டில் வாரிசுடன் துணிவு திரைப்படம் ஏறத்தாழ நுனி போட்டியில் உள்ளது. உலகளவில் அஜித் சாருக்கு இந்த படம் வெற்றியாகவே அமைந்திருக்கு" என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

தமிழ் சினிமாவில் 'காற்றின் மொழி', 'மிஸ்டர் சந்திர மௌலி' போன்ற படங்களை தயாரித்தவர் தனஞ்செயன். தற்போது தனஞ்செயன் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்', 'கொலைகாரன்', 'காக்கி' ஆகிய படங்களின் இணை தயாரிப்பில் உள்ளார். மேலும் தன் எழுத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை தற்போது வாரிசு திரைப்படமும், துணிவு திரைப்படமும் பெற்று வந்தாலும் வசூல் அடிப்படையில் இரண்டு படங்களும் வெற்றி படங்களாகவே அமைந்துள்ளது.

மேலும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் வசூல் மற்றும் திரையரங்க உரிமத்தின் நிலை குறித்து தயாரிப்பாளர் தஞ்சன்ஜெயன் நமது கலாட்டா  மீடியாவில் பேசிய முழு வீடியோ இதோ..

நடிகர் வடிவேலு தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்  - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. ஆறுதல் தெரிவித்து வரும் பிரபலங்கள், ரசிகர்கள்..
சினிமா

நடிகர் வடிவேலு தாயார் உடல்நலக் குறைவால் காலமானார் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. ஆறுதல் தெரிவித்து வரும் பிரபலங்கள், ரசிகர்கள்..

“இந்த பதிவு துணிவு படத்துடன் ஒப்பீடு அல்ல..” – வாரிசு பாடலாசிரியர் விவேக்கின் பதிவு வைரல்..
சினிமா

“இந்த பதிவு துணிவு படத்துடன் ஒப்பீடு அல்ல..” – வாரிசு பாடலாசிரியர் விவேக்கின் பதிவு வைரல்..

“துணிவு திரைப்படம் எனக்கு ஒரு சவால்..” -  படம் குறித்து மஞ்சு வாரியர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

“துணிவு திரைப்படம் எனக்கு ஒரு சவால்..” - படம் குறித்து மஞ்சு வாரியர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..