என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் வடிவேலு தொடர்ந்து தனது உடல் மொழியாலும் நகைச்சுசுவையான வசனங்களாலும் இன்றும் பல கோடி தமிழ் மக்களின் மனதில் வைகை புயலாக மையம் கொண்டிருக்கிறார் வடிவேலு. காண்ட்ராக்டர் நேசமணி, கைப்புள்ள, வீரபாகு, தீப்பொறி திருமுகம், இம்சை அரசன், பாடி சோடா, படித்துறை பாண்டி, என்கவுண்டர் ஏகாம்பரம், அலர்ட் ஆறுமுகம் என பல பெயர்களில் வைகை புயல் வடிவேலு வலம்வரும் திரைப்படங்களின் பெயர்களை நாம் மறந்தாலும் அந்த கதாபாத்திரங்களை நாம் மறக்கவே முடியாது.

இன்றும் சமூக வலைதளங்களில் பல ஆயிரக்கணக்கான மீம் கிரியேட்டர்களுக்கு பொக்கிஷமாக இருப்பவர் வடிவேலு. கடைசியாக இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் நடித்த வைகைப்புயல் வடிவேலுவை மீண்டும் துறையில் காண்பதற்காக தமிழ் ரசிகர்கள் அனைவரும் தவம் கிடக்கிறார்கள் என்று சொல்லவேண்டும்.

இந்நிலையில் தற்போது நடிகர் வைகை புயல் வடிவேலு தயாரிப்பாளர் & இயக்குனர் C.V.குமார் தயாரிப்பில் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் தயாராகும் புதிய வெப்சீரிஸ் ஆன டிடெக்டிவ் நேசமணி வித் சீரிஸில் நடிக்க உள்ளார் என போஸ்டர் வெளியானது. 

தங்கள் அபிமான திரை நட்சத்திரங்களுக்காக ஃபேன் மேட் போஸ்டர்களை ரசிகர்கள் உருவாக்குவது வழக்கம். அந்த வகையில் உருவான இந்த டிடெக்டிவ் நேசமணி போஸ்டரை பார்த்த தயாரிப்பாளர் C.V.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்து, “ஃபேக் நியூஸு இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா... ஆனால் தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா!!” என குறிப்பிட்டுள்ளார். 

சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வைகைபுயல் வடிவேலு OTT தளங்கள் குறித்தும் அடுத்து நடிக்கப்போகும் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெளியான இந்த போஸ்டர் வடிவேலு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவேளை இது சாத்தியமானால் இன்னும் மகிழ்ச்சிதான். வா தலைவா...