பிரபல சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர் ப்ரியா.இதனை தொடர்ந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியிருந்தார் ப்ரியா.அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான என் பெயர் மீனாட்சி தொடரின் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.

அடுத்ததாக EMI,மாப்பிள்ளை உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாக மாறினார்.இதனை தொடர்ந்து இவர் தமிழ் கடவுள் முருகன் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார் இந்த தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர் ஏராளமான ரசிகர்களையும் பெற்றார்.

இவற்றை தவிர பொன்மகள் வந்தாள்,கண்மணி உள்ளிட்ட ஹிட் தொடர்களிலும் நடித்திருந்தார் ப்ரியா.மலையாளத்திலும் சில சீரியல்களில் நடித்துள்ளார் ப்ரியா.சீரியல்கள் மட்டுமின்றி பசங்க 2,2.0,நடுவண் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கடைசியாக தமிழில் சன் டிவியின் கண்ணான கண்ணே தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

சில காரணங்களால் சில மாதங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து விலகிய இவர் , தற்போது மீண்டும் அதே தொடரில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.மீண்டும் சீரியலில் இணைந்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.இவரது ரீ என்ட்ரிக்கு பிறகு திரைக்கதையில் பல திருப்பங்கள் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

priya prince rejoins kannaana kanne serial after a break rahul nimeshika