தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர், நடிகர் அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்த ஹாஸ்டல் திரைப்படம் நேற்று (ஏப்ரல் 28) உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. தொடர்ந்து பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றனர்.

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், சிலம்பரசன்.T.R & கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல, ராகவா லாரன்ஸின் ருத்ரன், ஜெயம் ரவியின் அகிலன், இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் S.J.சூர்யா நடித்துள்ள பொம்மை மற்றும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் தமிழில் யாவரும் நலம் மற்றும் 24 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம்.K.குமார் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் வெப் சீரிஸாக உருவாகியிருக்கும் தூதா வெப்சீரிஸில் பிரியா பவானி ஷங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் தூதா வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தூதா வெப் சீரிஸில் பார்வதி, பிராச்சி தேசாய், தருண் பாஸ்கர் தாஸ்யம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற அமேசான் பிரைம் வீடியோவின் பிரமாண்ட நிகழ்ச்சியில் விரைவில் அமேசானின் வெளிவரவுள்ள வெப்சீரிஸ் & படங்கள் குறித்த அறிவிப்பில் தூதா அறிமுகம் செய்யப்பட்டது.