வினோத் இயக்கத்தில் தல அஜித் தற்போது நடித்து வரும் படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங்கில் பங்கேற்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. கொரோனா பரவி வரும் இந்த சூழலில் அரசுக்கு உதவி செய்யும் நோக்கில், ட்ரோன்களைப் பயன்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தக்ஷா குழுவுடன் இணைந்துள்ளார் அஜித்.

சமூக வலைத்தளங்களில் அஜித் இல்லாமல் இருந்தாலும் அவர் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாவது வழக்கம். இந்நிலையில் பப்லூ எனப்படும் நடிகர் ப்ரித்விராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசியவர் தல அஜித் மற்றும் ஷாலினி பற்றி பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

லாக்டவுனுக்கு முன்பு நான் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார் பிரித்விராஜ். அங்கு அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகளுடன் வந்து சாப்பிட்டாராம். ஷாலினியுடன் சேர்ந்து படத்தில் நடித்ததில்லை என்பதால், அவரை பார்த்தும் அவரிடம் போய் பேச தயக்கமாக இருந்ததாம். அதனால் பேசாமல் திரும்பியுள்ளார். பின் ஒரு நாள் ஹோட்டல் மேனேஜர் அவருக்கு போன் செய்து ஷாலினி மேடம் உங்களின் செல்போன் எண்ணை கேட்கிறார், கொடுக்கட்டுமா என்றார். தாராளமாக தாருங்கள் என்று நான் மேனேஜரிடம் கூறினேன்.

அதன் பிறகு ஷாலினி அஜித் எனக்கு போன் செய்து பேசினார். அவர் பேசுகையில் சாரி, நான் உங்களுடன் சேர்ந்து படத்தில் நடித்தது இல்லை. அதனால் உங்களை ஹோட்டலில் பார்த்தபோது நான் பேசவில்லை. நான் உங்களை பார்த்தும் பேசாமல் போனதை அஜித்திடம் கூறினேன். அதற்கு அஜித்தோ, ப்ரித்விராஜ் என் நண்பர், பள்ளியில் என் சீனியரும் கூட.. அவரை பார்த்தால் பேசியிருந்திருக்க வேண்டும் என்று கூறி கோபப்பட்டாராம். அஜித் தன் மனைவியிடம் அப்படி கூறியிருந்திருக்க வேண்டியது இல்லை. இது அவரின் குணத்தை காட்டுகிறது. அஜித் ஒரு பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன் என்று ப்ரித்விராஜ் தெரிவித்தார். அவள் வருவாளா படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்துள்ளார் ப்ரித்விராஜ். அந்த படத்தில் வில்லனாகவும்  நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வீடியோ பதிவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தல ரசிகர்கள். பிறரை மதிக்கும் அஜித்தின் இந்த குணத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தல டக்கர் டோய்...