பிருத்விராஜ் தமிழில் நடித்த படங்களில் முக்கியமான ஒன்று மொழி ராதா மோகன் இயக்கிய அந்த படம் தற்போதும் ரசிகர்களால் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு சிறப்பான ஒரு படம். அதில் ஜோதிகா பிரகாஷ் ராஜ் ஸ்வர்ணமால்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். 2007 இல் வெளிவந்த ரொமான்டிக் காமெடி படமான இது நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. 

படத்தில் நடித்த அனைவருக்கும் அதிக பாராட்டுகள் குவிந்தது. மேலும் வித்யாசாகரின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. பிரித்விராஜ் சமீபத்திய வருடங்களில் மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் அவர் பணியாற்றி ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது. 

இந்த வருடத் துவக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்து இருந்த அய்யப்பனும் கோஷியும் என்ற படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தினை தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற செய்திகளும் அடிக்கடி வந்த வண்ணம் இருக்கிறது. தமிழில் அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கப் போவது யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரித்விராஜ், நீங்கள் மீண்டும் தமிழில் ஒரு ரொமாண்டிக் காமெடி (Rom - Com) படத்தில் நடிக்க விரும்புவீர்களா எனும் கேள்விக்கு அசத்தலான பதிலை கூறியுள்ளார். தமிழில் மீண்டும் ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்க நான் நிச்சயம் விரும்புவேன் என தெரிவித்துள்ளார். 

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் பிரித்விராஜ். அதன் பின் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், அபியும் நானும், ராவணன் போன்ற படங்களில் நடித்து அவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மலையாளத்தில் முன்னணி ஸ்டாராக இருக்கும் பிரித்விராஜ், இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். 

ஆடு ஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜார்டன் சென்றவர், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக, படக்குழுவுடன் அங்கேயே சிக்கி கொண்டார். அதன் பின் பத்திரமாக சொந்த ஊர் திரும்பிய கதை அனைவரும் அறிந்ததே. தற்போது மிக பிரம்மாண்ட திரைப்படத்தை திரையுலகிற்கு அளிக்கவுள்ளார் பிரித்விராஜ். இயக்குனர் ஆர்.எஸ். விமல், மெய் நிகர் தொழில்நுட்பத்தில் புதிய படம் ஒன்றை உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியானது. கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்கும் இந்தப் படத்தை ப்ரித்விராஜே தனது மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார்.