மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற மெகாஹிட் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு தென்னிந்திய திரை உலகில் மிகப் பிரபலம் அடைந்தார். தமிழில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான கொடி திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். பிறகு தொடர்ந்து  தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என நான்கு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

குறிப்பாக தெலுங்கு சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரனுக்கு தெலுங்கு திரையுலகில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம். தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் அமலாபால் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் த்ரில்லர் திரைப்படமான  ராட்சசன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ராக்ஷசடு  திரைப்படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

premam fame anupama parameshwaran 18pages first look poster

இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும்,  நடிகர் நிகில் சித்தார்த்தும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான 18 PAGES காதல் ரொமான்டிக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் நிகில் சித்தார்த்தின் பிறந்தநாளான இன்று இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்திரைப்படத்திற்கு சுகுமார்  கதை, திரைக்கதை, வசனம் எழுத இயக்குனர் பல்நடி சூர்யா பிரதாப்  இயக்குகிறார். இத்திரைப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்தின் GA2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. முன்னணி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சமீபத்தில் 18 PAGES படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கபட்ட நிலையில் விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.