மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரேமம் இயக்குனர் .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான அப்டேட் இதோ..

மீண்டும் தமிழ் சினிமாவில்  அல்போன்ஸ் புத்திரன் - Alphonse puthren next movie in tamil | Galatta

பிரேமம் படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். தமிழ், தெலுங்கு, கன்னட மக்கள் பெரும்பாலானோர் மலையாளம் திரைபபடம் பார்க்க பிள்ளையார் சுழி போட்டது அல்போன்ஸ் புத்திரனின் பிரேமம். சாதரணமான கதையை அசாத்தியமாக அல்லது தனித்துவமான திரைக்கதை அமைத்தில் வல்லவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படமான தமிழில் ‘நேரம் படமும் அட்டகாசமான திரைக்கதை கொண்டு ரசிகர்கள் மனதினை அதிகம் கவர்ந்தது. அவரது அடுத்த படைப்பான மலையாளத்தில் பிரேமம் வெகுஜன மக்களிடம் பெருவாரியான வரவேற்பை பெற்று சொல்ல போனால் மற்ற மொழிகளில் ரெமேக் செய்யுமளவு உச்சபட்ச இடத்தை சென்றது.

தமிழில் நல்ல ஒரு அறிமுகம், மலையாளத்தில் கோலாகலமான வரவேற்பு என பெற்ற அல்போன்ஸ் புத்திரன் நீண்ட இடைவெளிக்கு பின் மலையாளத்தில் பிரித்வி ராஜ், நயன்தாரா வை வைத்து ‘கோல்ட் என்ற படத்தை இயக்கினார்.  படம் கலவையான விமரசனத்தை பெற்றாலும் ஒரு மிதமான கம்பேக் காக படம் அமைந்தது. ஒரு படம் தமிழ் மருபடம் மலையாளம் என்று வரிசை மாறாமல் திரைப்படம் கொடுத்து வரும் அல்போன்ஸ் புத்திரனின் வரிசை படி பார்த்தால் அவர் இயக்க போகும் அடுத்த படம் தமிழில் என்று ரசிகர்கள் முன்னதாக கருத்துகளை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ராகுல் அவரை சந்தித்து உள்ளார். ராகுல் நெஞ்சுக்கு நீதி மற்றும் வீட்ல விசேஷம் படங்களுக்கு இணை தயாரிப்பலாராவர். மேலும் துணிவு, வலிமை ஆகிய படங்களுக்கு விநியோகஸ்தராகவும் பணியாற்றியவர். இவரது ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம்  தற்போது பாபா பிளாக் ஷீப் என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். மேலும் நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக நடிகர் கவின் அவர்களை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தை தயாரிப்பதாகவும்தகவல் வெளியானது. அதன்படி தற்போது தயாரிப்பாளர் ராகுல் அவர்களை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சந்தித்து இவ்வாறு பதிவிட்டுள்ளார். “எனது அடுத்த கட்ட நடவடிக்கை எனது பழைய நண்பர் மற்றும் தயாரிப்பாளர் ராகுல் அவர்களுடன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

A post shared by Alphonse Puthren (@puthrenalphonse)

இதனையடுத்து அல்போன்ஸ் புத்திரன் அடுத்த திரைப்படம் தமிழில் ராகுல் தயாரிப்பில் இயக்கவுள்ளார் என்ற தகவல் உறுதியானது. மேலும், ஒரு பதிவில் அல்போன்ஸ் புத்திரன், “வெண்ணிலா கபாடி குழு படத்தில் சூரி சொல்வது போல், ‘இதுவரைக்கும் பண்ணதுலாம் விடுங்க..நம்ம முதல்லருந்து ஆரம்பிப்போம்.. மீண்டும் தமிழில் வருகிறேன். மிகுந்த தன்னம்பிக்கையுடன் குறிக்கோளுடன் காதலுடன் அறிவிப்பு விரைவில் வரும்” என்று பதிவிட்டுள்ளார்.

viduthalai actor soori about pre production experience with vetri maaranஇதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த பதிவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் உலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.  

தொடங்கியது காந்தாரா 2.. உற்சாகத்தில் ரசிகர்கள் -  படக்குழு கொடுத்த அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

தொடங்கியது காந்தாரா 2.. உற்சாகத்தில் ரசிகர்கள் - படக்குழு கொடுத்த அட்டகாசமான அப்டேட் இதோ..

“சாதி பேசுகின்ற படங்கள் எல்லாமே தவறான படங்கள் தான்” வேல ராமமூர்த்தி காரசாரமான பதில்..  – வைரலாகும் சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

“சாதி பேசுகின்ற படங்கள் எல்லாமே தவறான படங்கள் தான்” வேல ராமமூர்த்தி காரசாரமான பதில்.. – வைரலாகும் சிறப்பு நேர்காணல் இதோ..

“பத்து தல படத்தில் நான் இதுதான் Follow பண்ணேன்..” கௌதம் கார்த்திக் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ..
சினிமா

“பத்து தல படத்தில் நான் இதுதான் Follow பண்ணேன்..” கௌதம் கார்த்திக் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ..