சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகையாக அசத்தி வருபவர் ப்ரீத்தி குமார்.முதலில் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான ஆபீஸ் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.தனது நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் ப்ரீத்தி.

இதனை தொடர்ந்து லட்சுமி கல்யாணம்,வள்ளி,பிரியமானவள்,கேளடி கண்மணி,தெய்வம் தந்த வீடு,லட்சுமி வந்தாச்சு,கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்தார் ப்ரீத்தி.இவற்றை தவிர நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் சுந்தரன் நீயும் சுந்தரன் நானும் தொடர்களிலும் நடித்து அசத்தி இருந்தார் ப்ரீத்தி குமார்.

பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் நெகட்டிவ் வேடங்களில் நடித்து தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் ப்ரீத்தி.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.இதனை தவிர ஈரமான ரோஜாவே 2,நினைத்தாலே இனிக்கும் தொடர்களில் நடித்து வந்தார்.ஈரமான ரோஜாவே தொடரில் இருந்து சில மாதங்கள் முன் விலகினார்.

சன் டிவியில் சக்கைபோடு போட்டு வரும் வானத்தைப்போல தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வந்தார் ப்ரீத்தி.இவரது கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.யாரும் எதிர்பாராத விதமாக சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து இவர் விலகியுள்ளார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.இவர் திடீரென விலகியது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

preethi kumar quits from vanathai pola serial sree debajini modak manya anand