தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரதிப் ரங்கநாதன். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக வெளிவந்த கோமாளி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள லவ் டுடே திரைப்படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ள, லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். லவ் டுடே திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற நவம்பர் மாதம் 4-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.  

பக்கா என்டர்டைன்மென்ட் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள லவ் டுடே திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்திலிருந்து தற்போது புதிய ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கலக்கலான அந்த ஸ்னீக் பீக் வீடியோ இதோ…