தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக, தனது முதல் திரைப்படமான கோமாளி திரைப்படத்திலேயே இயக்குனராக முத்திரை பதித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ள, லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வருகிற நவம்பர் மாதம் 4-ம் தேதி பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் லவ் டுடே திரைப்படத்தில் இருந்து அடுத்த பாடலாக பச்ச எலை எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கலக்கலான அந்த பாடல் இதோ…