90'S கிட்ஸ்களின் ஃபேவரட் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து சத்யராஜ் ராதிகா யோகி பாபு இவானா ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் லவ் டுடே திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தனது 22 வது திரைப்படமாக தயாரிக்கும் லவ் டுடே படத்திற்கு தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னதாக லவ் டுடே திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் முதல் பாடலாக சாட்சிட்டாலே பாடல் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பாடலை அறிவிக்கும் வகையில் யுவன்ஷங்கர் ராஜா மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவரும் பாடல் ரெக்கார்டிங்கில் ஈடுபடுவது போன்ற கலகலப்பான ப்ரோமோ வீடியோவும் வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…