தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் மஹத். மங்காத்தா மற்றும் ஜில்லா போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பில் ஈர்த்திருப்பார். சென்னை 28 - 2, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் மேக்வென் இயக்கத்தில்  இவன் தான் உத்தமன் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

mahat

சமீபத்தில் நடிகர் மஹத்தின் திருமணம் நடைபெற்றது. தனது காதலியான பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்தார். மஹத்தின் திரை வட்டார நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த தம்பதியை வாழ்த்தினர். STR, அனிருத் போன்றோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

mahatprachi

இந்நிலையில் பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்பதிவில் நான் சொன்னேன்ல மஹத்.. ஒருவருட வாழ்க்கை வித்தியாசமாக இருக்கும் என்று, இப்போ நாம ஹவுஸ் அரெஸ்ட்ல இருக்கோம். எல்லாவற்றிற்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த அழகான ஜோடியின் பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.