பிரபுதேவா நடிப்பில் பஹீரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ !
By Sakthi Priyan | Galatta | February 14, 2020 19:00 PM IST

STR நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பிரபுதேவா வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பஹீரா என டைட்டில் வைக்கப்பட்டது. பிப்ரவரி 14-ம் தேதியான காதலர் தினத்தன்று இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது.
பரதன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் காதலன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் ஒரு பக்கம் பேசப்படுகிறது. மொட்டையடித்த கெட்டப்புடன் பிரபுதேவா இருக்கும் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கணேசன் சேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். பிரபுதேவா கைவசம் பொன்மாணிக்க வேல் திரைப்படமும் ரிலீஸ் பட்டியலில் உள்ளது.