இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடன இயக்குனராகவும், ப்ளாக்பஸ்டர் படங்களைக் கொடுக்கும் கமர்சியல் இயக்குனராகவும் வலம் வரும் பிரபுதேவா, நடிகராகவும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனக்கே உரித்தான ஸ்டைலில், பிரபுதேவாவின் நடிப்பும் நடனமும் ரசிகர்களுக்கு எப்போதும் ஸ்பெஷல் ட்ரீட் தான்.

அந்த வகையில் பிரபுதேவாவின் நகைச்சுவை சரவெடியாக, யங் மங் சங் , காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ள பொய்க்கால் குதிரை உள்ளிட்ட திரைப்படங்கள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விரைவில் வெளிவரவுள்ள பஹீரா திரைப்படத்தில் பல மாறுபட்ட மிரட்டலான கெட்டப்களில் சுவாரஸ்யமான சைக்கோ கதாப்பாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ளார். கதாநாயகிகளாக அமைரா, ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சாக்ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும்  நாசர், "பாய்ஸ்" மணிகண்டன், சாய் குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் பஹீரா திரைப்படத்தை பரதன் பிக்சர்ஸ் சார்பில் R.V.பரதன் தயாரித்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது பஹீரா படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியானது.அந்த ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.