தனது தனித்துவமான ஸ்டைலில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிக்கும் பிரபுதேவா அவர்களின் வித்தியாசமான நடிப்பில் சைக்கோ த்ரில்லர் படமாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் பஹீரா வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. 

மேலும் இதனையடுத்து ஃபிளாஷ்பேக், ரேக்ளா, முஸாஸிர் உள்ளிட்ட திரைப்படங்களும் அடுத்தடுத்து பிரபுதேவா நடிப்பில் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் இயக்குனர் சந்தோஷ்.P.ஜெயக்குமார் இயக்கத்தில் ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி கதாப்பாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் பொய்க்கால் குதிரை.

மினி ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொய்க்கால் குதிரை படத்தில் பிரகாஷ்ராஜ், வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்யாம், ஜெகன், ரைசா வில்சன் மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பொய்க்கால் குதிரை திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

பல்லு ஒளிப்பதிவில் பொய்க்கால் குதிரை படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில்,  ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளியாக டான்ஸ், காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என பிரபுதேவா கலக்கியிருக்கும் பொய்க்கால் குதிரை படத்தின் சிங்கிளு வீடியோ பாடல் தற்போது வெளியானது. அசத்தலான சிங்கிளு வீடியோ பாடல் இதோ…