நடன இயக்குநர், நடிகர், இயக்குனர் என தொடர்ந்து தனது படைப்புகளால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பிரபுதேவா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மை டியர் பூதம்.குழந்தைகள் கொண்டாடும் ஃபேண்டஸி அட்வென்ச்சர் திரைப்படமாக மை டியர் பூதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்திருக்கும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமான பஹீரா வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தொடர்ந்து ஃபிளாஷ்பேக், ரேக்ளா, முஸாஸிர் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து பிரபுதேவா நடிப்பில் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே மினி ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சந்தோஷ்.P.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கும் பொய்க்கால் குதிரை திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பொய்க்கால் குதிரை திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. 

பொய்க்கால் குதிரை படத்தில் பிரகாஷ்ராஜ், வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்யாம், ஜெகன், ரைசா வில்சன் மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பொய்க்கால் குதிரை படத்திற்கு பல்லு ஒளிப்பதிவில் டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், பொய்க்கால் குதிரை படத்தின் சிங்கிளு பாடல் மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. கலக்கலான சிங்கிளு பாடல் மேக்கிங் வீடியோ இதோ…