நடிகர், நடன இயக்குனர் & இயக்குனர் என தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பிரபுதேவாவின் நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக பிரபுதேவா நடிப்பில் குழந்தைகளை கவரும் வகையில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் படமாக சில தினங்களைக்கு முன் ரிலீஸான மை டியர் பூதம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து பிரபுதேவாவின் நடிப்பில் பொய்க்கால் குதிரை, ரேக்ளா, முஸாஸிர், ஃப்ளாஷ்பேக் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் பஹீரா.

பரதன் பிக்சர்ஸ் சார்பில் R.V.பரதன் தயாரித்துள்ள பஹீரா படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து ரம்யா நம்பீசன், அமைரா தஸ்டர், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய்குமார், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

செல்வகுமார்.S.K. மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் பஹீரா படத்திற்கு கணேசன்.S இசை அமைத்துள்ளார். நீண்ட காலமாக பஹீரா திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், தற்போது வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Real Independence Day for Soup boys. 🐻 @PDdancing ‘s #Bagheera releasing on Aug 11th.

An @Adhikravi Pain KILLER @RVBharathan @AmyraDastur93 @Ganesan_S_ @nambessan_ramya @jananihere @SGayathrie @ssakshiagarwal @AbinandhanR @selvakumarskdop @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/VTFR0NeSJx

— CtcMediaboy (@CtcMediaboy) July 21, 2022