இந்திய சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக, நடன இயக்குனராக மற்றும் நடிகராகவும் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் பிரபுதேவா. அடுத்தடுத்து வரிசையாக பிரபு தேவாவின் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க வெளிவரவுள்ளன.

பல வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபுதேவா நடிக்க, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமான பஹீரா, இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனர் சந்தோஷ்.P.ஜெயகுமார் இயக்கத்தில் மாற்றுத்திறனாளியாக மிரட்டலான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ள பொய்க்கால் குதிரை ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

அந்தவகையில் அடுத்ததாக பிரபு தேவா முதல் முறை காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படம் வருகிற நவம்பர் 19ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகிறது. நேமிசந்த் ஜபக், வி. ஹிதேஷ் ஜபக் தயாரித்துள்ள பொன் மாணிக்கவேல் படத்தை இயக்குனர் ஏ.சி.முகில் செல்லப்பன் எழுதி இயக்கியுள்ளார்.

பிரபுதேவாவுடன் இணைந்து நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்க சுரேஷ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன் மாணிக்கவேல் படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பொன்மாணிக்கவேல் திரைப்படத்திலிருந்து உதிரா உதிரா பாடல் வீடியோ தற்போது வெளியானது. அழகான அந்த பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.