பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.இதனை தொடர்ந்து பிரபாஸ் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவான சாஹோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் சுமாரன வரவேற்பை பெற்றிருந்தது.

சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.ராதே ஷ்யாம் என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.கடந்த சில வருடங்களாக ஆக்ஷன் மோடில் இருந்த பிரபாஸ் இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்குகிறார்.இதனை அடுத்து இவர் நடிக்கவுள்ள படம் பிரபாஸ் 21.

மகாநதி/நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.வைஜயந்தி மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அரவிந்த்சுவாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.முன்னதாக சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூருடன் நடித்த பிரபாஸ் இந்த படத்தில் தீபிகா படுகோனுடன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பிரபாஸ் நடிக்கும் பிரபாஸ் 22 படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூஷன் குமார், தன்ஹாஜி - தி அன்சங்க் வாரியர் பட இயக்குநர் ஓம் ராவத், ரெட்ரோஃபைல்ஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் சூப்பர்ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் ஆதிபுருஷ் என்ற பிரம்மாண்ட 3டி படத்தில் இணைகின்றனர்.

இந்திய கலாச்சாரத்தின் மிகப் பிரபலமான அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரம்மாணட படைப்பு இந்தி மற்றும் தெலுங்கில் படமாகிறது. இந்த 3டி கொண்டாட்டம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் மிகப்பெரும் பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் அறிவிப்பு இன்று காலை வெளியான நிலையில் இந்த படம் குறித்த ஒரு வீடீயோவை பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.படத்தின் அறிவிப்பு குறித்த இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Celebrating the victory of good over evil... Title Announcement #Adipurush @omraut @bhushankumar @vfxwaala @rajeshnair29 @tseriesfilms @retrophiles1 @tseries.official #TSeries

A post shared by Prabhas (@actorprabhas) on