பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.இதனை தொடர்ந்து பிரபாஸ் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவான சாஹோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் சுமாரன வரவேற்பை பெற்றிருந்தது.

சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ராதே ஷ்யாம் என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.கடந்த சில வருடங்களாக ஆக்ஷன் மோடில் இருந்த பிரபாஸ் இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்குகிறார்.இந்த படத்திற்க்கு Dear Comrade,மான்ஸ்டர்,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் தங்கள் ஷூட்டிங்கில் பயன்படுத்திய செட் பொருட்களான மருத்துவமனை பெட்,ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை மருத்துவனைக்கு அளித்து உதவியுள்ளனர்.