பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் ராதே ஷியாம்,சலார்,நாக் அஷ்வின் இயக்கத்தில் ஒரு படம்,ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது.இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பெரிய எதிர்பாப்புக்கிடையே இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் இன்று பூஜையுடன் தொடங்குகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்று படக்குழுவினர் தங்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Project கே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் காட்சியில் அமிதாப் பச்சன் நடிக்க பிரபாஸ் கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

View this post on Instagram

A post shared by Prabhas (@actorprabhas)