தெலுங்கு சினிமாவின் அதிரடி ஆக்சன் கதாநாயகனாகவும் முன்னணி நட்சத்திர நடிகராகவும் வருபவர் நடிகர் பிரபாஸ். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரமாண்ட படைப்பான பாகுபலி 1&2 திரைப்படங்களுக்கு பிறகு இந்திய அளவில் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அடுத்ததாக கன்னட சினிமாவில் வெளிவந்து இந்திய அளவில் மெகா ஹிட்டான கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் சலார் படத்தில் நடித்து வரும் பிரபாஸ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இதிகாச கதைக்களமான இராமாயணத்தைத் தழுவி தயாராகும் ஆதிப்ருஷ் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம்.UV  கிரியேஷன்ஸ் மற்றும் T-SERIES பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள ரொமான்டிக் ஆக்சன் திரைப்படமான ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகும் ராதே ஷ்யாம் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடலாக ஆகூழிலே பாடல் தற்போது வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா குரலில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஆகூழிலே பாடல் வீடியோ இதோ…