பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது.இதனை அடுத்து வெளியான சாஹோ,ராதே ஷியாம் படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றன.இவற்றை அடுத்து சலார்,ப்ராஜெக்ட் கே,ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

Project K படத்தினை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கின்றனர்,இந்த படத்தினை நாக் அஷ்வின் இயக்குகிறார்.இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு முதலே படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.Sci-Fic படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது அதன்பின் பெரிய அப்டேட் எதுவும் இல்லை இதனால் ரசிகர்கள் பலரும் படக்குழுவிடம் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

அப்படி அப்டேட் கேட்டு வந்த ரசிகர் ஒருவருக்கு இயக்குனர் நாக் அஷ்வின் தெரிவித்துள்ளார்.Project K படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பிரபாஸின் ஓப்பனிங் காட்சி உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன என்றும்,ஜூன் மாதம் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வெளிவர இன்னும் சில வருடங்கள் கூட ஆகலாம் ஆதலால் உடனுக்குடன் அப்டேட்கள் எதிர்பார்க்காதீர்கள் என்று ரசிகர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.