பாகுபலி இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவையும் தெலுங்கு சினிமாவை உற்று நோக்க வைத்த படங்களில் ஒன்று.பிரபாஸ் இந்த படத்தின் ஹீரோவாக நடித்திருந்தார்.எஸ்.எஸ்.ராஜமௌலி இந்த படத்தை இயக்கியிருந்தார்.

Prabhas About Baahubali 2 Thanks Fans and Director

அனுஷ்கா,தமன்னா,ராணா,ரம்யா கிருஷ்ணன்,சத்யராஜ்,நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகியிருந்தது.வசூல் சாதனை புரிந்த இந்த படத்தின் மூலம் இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் உலகளவில் பிரபலமானார்கள்.

Prabhas About Baahubali 2 Thanks Fans and Director

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.இதுகுறித்து படத்தின் நாயகன் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இது தனது வாழ்க்கையில் மிகமுக்கியமான படம் இந்த படத்திற்காக தனக்கு கிடைக்கும் அன்புக்கு இயக்குனருக்கும்,படக்குழுவினருக்கு,தனது ரசிகர்களுக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.