சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Prabhas 20 Updates To Follow After Corona Crisis

பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

Prabhas 20 Updates To Follow After Corona Crisis

ஜார்ஜியாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.ஆனால் கொரோனா காரணமாக இந்த படம் குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.