மறைந்த மலையாள இயக்குனர் சச்சி இயக்கத்தில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான பிரித்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் இணைந்து நடித்து கடந்த ஆண்டு வெளிவந்து மெகா ஹிட்டான திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். தற்போது ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக பீம்லா நாயக் திரைப்படம் தயாராகி வருகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவர் ஸ்டார்  பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை நித்யா மேனன் & நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். பிரபலத் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.முன்னணி இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் வசனங்களை எழுதியுள்ளார். ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன்.S இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது பீம்லா நாயக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. வருகிற 2022ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பீம்லா நாயக் திரைப்படம் வெளியாகிறது. இதனை அறிவிக்கும் விதமாக அதிரடியான ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். துப்பாக்கியோடு இருக்கும் பவர்ஸ்டார் பவன் கல்யாணின் அதிரடியான ப்ரோமோ வீடியோ இதோ.