இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் வெளிவந்த தும்பா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கரும் தயாரிப்பாளருமான நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் மகளான கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹெலன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக அன்பிற்கினியாள் படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார். அன்பிற்கினியாள் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனின் தந்தையான நடிகர் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் உடன் இணைந்து நடித்திருந்தார்

அடுத்ததாக நடிகை கீர்த்தி பாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இயக்குனர் ஷாலினி இயக்கியுள்ள கண்ணகி திரைப்படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்துள்ளார். கண்ணகி படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி பாண்டியனின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனின் கவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த புகைப்படம் இதோ...