19 வருடங்களுக்கு பிறகு பிறந்த தங்கையை ரசிகர்களுக்கு காட்டிய சீரியல் நடிகை !
By Aravind Selvam | Galatta | June 22, 2021 16:36 PM IST

சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக இருந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நேஹா மேனன்.இதனை தொடர்ந்து சன் டிவியில் ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான வாணி ராணி தொடரில் நடித்து மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராக மாறினார்.
தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள்,தமிழ் செல்வி உள்ளிட்ட சில சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நேஹா.இவற்றை தவிர யட்சன் யட்சன்,ஜாக்சன் துரை,நாரதன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து அசத்தி இருந்தார் நேஹா.
நடிப்பிற்கு ஒரு சிறு இடைவேளை விட்டிருந்த நேஹா,சில வருடங்களுக்கு பிறகு சன் டிவியின் சித்தி 2 மற்றும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர்களில் நடித்து வருகிறார்.இந்த இரண்டு தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நேஹா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தனக்கு கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் தங்கை பிறந்துள்ளார் என்பதை அறிவித்தார் நேஹா.தற்போது தனது தங்கைக்கு சாஹித்தி என்று பெயரிட்டுள்ளதாக தெரிவித்து முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நேஹா.
Suriya and Jyothika's new message to fans - latest photos go viral!
22/06/2021 07:11 PM
Bigg Boss Second Innings announced - Official Breaking Statement!
22/06/2021 06:27 PM
Thalapathy 66 Director's BIG SURPRISE for Vijay fans - Check Out!
22/06/2021 06:13 PM