தமிழ் திரை உலகின் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவராகத் திகழும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தமிழ் தெலுங்கு மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளார்.இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடித்த வண்ண வண்ண பூக்கள் திரைப்படமும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த ஹாஸ்பிடல் திரைப்படமும் தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கு தேசிய விருதை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.கடைசியாக நடிகர் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான கர்ணன் படத்தையும் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். 

தென்னிந்திய திரை உலகில் வெற்றிகரமான மற்றும் சிறந்த தயாரிப்பாளராக விளங்கும் மதிப்பிற்குரிய திரு.கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் இந்த கடினமான காலகட்டத்தில் மொத்த நாடும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். 

உலக அளவில் பல நாடுகள் கொரோனா முதல் அலை பாதிப்பில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தியாவில் முதல் அலைப் பாதிப்பு நகர்புரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும் கிராமப்புரங்களில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி அதிகப்படியான உயிரிழப்புகளையும் பதிவு செய்துவிட்டது. தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்படுவதால் இந்திய வரலாற்றில் முதல் முறையாக பள்ளி மேல்நிலைத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன .   

தடுப்பூசி போட்ட நாடுகள் - 

மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசியைப் பெரும்பாலான அளவில் செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.       

இந்தியாவில் மூன்றாவது அலை - 

தடுப்பூசிப் போடுவதில் தாமதமாக செயல்படும் நாடுகள் மூன்றாவது அலை பாதிப்பில் சிக்கி வருவதை அங்கிருந்து வரும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. மிகச் சிறிய நாடுகளே தடுப்பூசி கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா தடுப்பூசித் தயாரிப்பில் மிகவும் பின்னடைவை சந்தித்து வருகிறது. 

தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தும் மாநிலங்களில் பெருவாரியான மக்களிடம் தடுப்பூசியின் பின் விளைவுகள் குறித்து தவறான கருத்து பரவி வருவதால் பயத்துடன் தடுப்பூசி செலுத்த முன்வரவில்லை. தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை அடித்தட்டு மக்களிடம் எடுத்துக் செல்ல வேண்டிய பணியும் இந்திய அரசுக்கு சவாலாக இருக்கிறது. 

இந்தியாவில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 10 சதவிதத்துக்கும் குறைவாக இருப்பதால் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் சாத்தியக் கூறுகள் அதிகரித்து வருவதாகவே அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் குறைந்தபட்சம் 60 சதவித மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது எனும் நிலை வரும்போது மட்டுமே வைரஸ் பரவல் அச்சத்திலிருந்து மீள முடியும்.

இத்தகைய சூழலில் முன்னணி தமிழ் தயாரிப்பாளர், கலைப்புலி S தாணு, மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். மூன்றாம் அலையின் வீரியத்தை கட்டுப்படுத்த இந்திய மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்வது நல்லது என்றும் தாணு எடுத்துரைத்திருக்கிறார்.