மலையாளத் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி நடிகர் விஷால் நடித்து ,இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய ஆக்சன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி. சுந்தர்.சி இயக்கத்தில் அதிரடி திரைப்படமாக வெளிவந்த ஆக்சன் திரைப்படத்தில் நடிகர் விஷால், தமன்னா உடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடிகர் தனுஷின் ஜோடியாக களமிறங்கினார். கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் அதிரடி கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் இந்த மாதம் 18ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜகமே தந்திரம் திரைப்படத்தைத் தொடர்ந்து இந்தியாவின் தலை சிறந்த இயக்குனரான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் எழுத்து உருவான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி தனது சூப்பர் ஹாட் புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் இந்த சூப்பர் ஹாட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)