யூட்யூபில் டெம்பிள் மன்க்கீஸ் என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமடைந்த சாரா, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளிவந்த மீசையமுறுக்கு திரைப்படத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அடல்ட் காமெடி திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்திலும் காமெடியில் கலக்கியிருந்தார் சாரா.இதையடுத்து நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கோமாளி மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். 

கடைசியாக நடிகர் அசோக்செல்வன் ,ரித்திகா சிங், வாணி போஜன் இணைந்து நடித்த ஓ மை கடவுளே திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக டிக்கிலோனா, காதலிக்க யாருமில்லை, பல்லு படாம பாத்துக்க, அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்மப்பா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது நடிகர் சாராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே ஆண் குழந்தைக்கு தந்தையான நடிகர் சாராக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சாரா “சக்தி மகளாக பிறந்திருக்கிறாள். தாயும் சேயும் நலம். இறைவனுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் சாராவுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Ra_Shiva shah ra (@shivashahra_official)