விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சிறு சிறு வேடங்கள் ஏற்று நடித்து வந்த பாபு தமிழ் சினிமாவில் இயக்குனர் அமீர் நடித்த யோகி திரைப்படத்தின் மூலம் யோகிபாபு -வாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிறு சிறு நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த நடிகர் யோகிபாபு மான் கராத்தே, காக்கிச்சட்டை, காக்கா முட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு தமிழ் திரையுலகில் மிகப் பிரபலம் அடைந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அஜீத்துடன் வீரம், வேதாளம் தளபதி விஜய்யுடன்  சர்க்கார், பிகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் என  நடித்து தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்து விட்டார்.நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் அவ்வபோது கலக்கி வரும் நடிகர் யோகிபாபு ஆண்டவன் கட்டளை பரியேறும் பெருமாள்  உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். 

இந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் முழுக்க முழுக்க ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து யோகி பாபு ஒரு நகைச்சுவை நடிகர் என்பதை மறக்கும் அளவிற்கான ஒரு அனுபவத்தை அளித்திருந்தார். மேலும் கதாநாயகனாக இவர் நடித்து வெளிவந்த மண்டேலா திரைப்படமும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுத்தந்தது.அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவர உள்ள அரண்மனை 3 நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி மற்றும் டிக்கிலோனா உள்ளிட்ட திரைப்படங்கள் யோகி பாபு நடிப்பில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக படப்பிடிப்பின்போது நடிகர் நடிகைகள் சிறுசிறு விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம் அந்த வகையில் நடிகர் யோகிபாபு படப்பிடிப்பின் போது கிரிக்கெட் விளையாடுவார் என்பது நாம் அறிந்த விஷயமே அந்த வகையில் தற்போது நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.