தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா.  தொடர்ந்து எதிரி, தொங்கா தொங்காடி, மோனாலிசா என தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

குறிப்பாக சீயான் விக்ரமின் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த அந்நியன், தல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த திருப்பதி, இயக்குனர் & ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளிவந்த உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

கடைசியாக தெலுங்கில் வெளிவந்த யாமலீலா 2 படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்த சதா, தமிழில் வைகைபுயல் வடிவேலு கதாநாயகனாக நடித்த எலி மற்றும் டார்ச் லைட் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகை சதாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சன் கிளாஸ் அணிந்தபடி நீச்சல் குளத்தில் நீச்சலுடையில் சதா இருக்கும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sadaa (@sadaa17)