ஜெயம் ரவி,அரவிந்த் சுவாமி,நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தனி ஒருவன்,ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இவரது இசையில் கண்ணால கண்ணால என்ற பாடலை பாடி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கௌஷிக் க்ரிஷ்.இந்த பாடல் பெரிய ஹிட் அடித்தது.

தொடர்ந்து இவர் ஹிப்ஹாப் தமிழா இசையில் கவண்,மீசைய முறுக்கு,கலகலப்பு 2,இமைக்கா நொடிகள்,வந்தா ராஜாவாதான் வருவேன்,கோமாளி,ஆக்ஷன்,நான் சிரித்தால் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் பாடியுள்ளார்.இவர் பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டும் அடித்தன.

இதனை அடுத்து யூடியூப்பில் பிரபலமான எருமசானி விஜய்,ஹரிஜா,பரிதாபங்கள் கோபி,சுதாகர் உள்ளிட்டோர் நடிக்கும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் யாஷிகா ஆனந்த்,ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கௌஷிக் க்ரிஷ் இசையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளது.தற்போது கௌஷிக்கிற்கு பல்லவி தாஸ் என்பவருடன் திருணம் நடைபெற்றுள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.