தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.சன் டிவியில் சில மாதங்களுக்கு முன் சில தொடர்கள் தொடங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கிய தொடர் சுந்தரி.இந்த தொடரின் நாயகியாக கேப்ரியல்லா நடித்துள்ளார்,இவர் டிக்டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறியவர்.இந்த தொடரின் நாயகனாக ஜிஷ்ணு மேனன் நடித்துள்ளார்,ஸ்ரீகோபிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

200 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் லக்ஷ்மி வாசுதேவன் விலகியுள்ளார் என்றும் அவருக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை இணைந்துள்ளார்.