மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி பல விருதுகளை வாங்கிக் குவித்த இளம் நடிகை சனுஷா தமிழில் ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ரேணிகுண்டா திரைப்படத்தில் வாய் பேச முடியாத இளம் பெண்ணாக நடித்த சனுஷாவின் நடிப்பு பலரையும் வெகுவாக கவர்ந்தது. 

popular malayalam actress sanusha epic reply to haters

நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த அலெக்ஸ்பாண்டியன் திரைப்படத்திலும் சனுஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்த கொடிவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சனுஷா, கடைசியாக நடிகர் நானி நடித்து மெகா ஹிட்டான ஜெர்ஸி தெலுங்கு திரைப்படத்தில் பத்திரிக்கையாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சானுஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகை சானுஷாவை சமூக வலைதள பக்கங்களில் உடல்எடையை வைத்து உருவ கேலி செய்தவர்களுக்கு தற்போது நடிகை சனுஷா தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

“யாரெல்லாம் என் உடல் எடையைப் பற்றி என்னைவிட அதிகமாக கவலைப்படுகிறார்களோ அதைக்குறித்து பேசுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அவசியமில்லை. என்னை சுட்டிக் காட்டி பேசும் எல்லோரும் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரை  உங்களின் இரு விரல்களால் சுட்டிக்காட்டும்போது மீதமுள்ள மூன்று விரல்களும் உங்களை சுட்டிக்காட்டும் என்பதை மறந்து விடாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும்” 

என தெரிவித்துள்ளார் உருவ கேலி செய்தவருக்கு சனுஷா அளித்துள்ள  பக்கா பதிலடிக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். நடிகை சனுஷாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.