டாப்ஸி படத்தின் வேற லெவல் டிரைலர்-மாஸ் வீடியோ இதோ!!!
By Anand S | Galatta | June 11, 2021 11:42 AM IST

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தமிழில் நடிகர் ஜீவா நடித்த வந்தான் வென்றான் அஜித் குமார் நடித்த ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இவர் நடித்த GAME OVER திரைப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமானாலும் பாலிவுட்டிலும் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்டாப்ஸி. இந்திய திரை உலகின் மூத்த முன்னணி நடிகரான நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து இவர் நடித்த பிக் திரைப்படம் இந்திய அளவில் டாப்ஸியை பிரபலப்படுத்தியது.
அதை தொடர்ந்து இவர் நடித்த தி காசி அட்டாக், மிஷன் மங்கள், தப்பட் உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் பாலிவுட்டிலும் சூப்பர் ஹிட்டாக தற்போது இவர் நடித்த ஹஸீன் தில்ரூபா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இயக்குனர் விணில் மேத்யூ இயக்கும் ஹஸீன் தில்ரூபா திரைப்படத்தில் நடிகை டாப்ஸி உடன் இணைந்து விக்ரான்ட் மாஸே ஹர்ஷவர்தன் ரானே நடித்துள்ளனர் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ஆனந்த் எல் ராய் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
ஹஸீன் தில்ரூபா ரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ஹஸீன் தில்ரூபா படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஹஸீன் தில்ரூபா திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் வெகுவாக காத்திருக்கிறார்கள்.; வருகிற ஜூலை 2ஆம் தேதி NETFLIX OTT தளத்தில் திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த மிரட்டலான ட்ரைலர் சமூகவலைதளங்களில் வருகிறது.
This young heroine's latest important statement about Bigg Boss 5 - Check Out!
10/06/2021 05:28 PM
R.I.P.: National award winning legendary filmmaker breathes his last - big loss!
10/06/2021 04:37 PM
WOW: This young sensational hero gets married | Trending Wedding Pictures here!
10/06/2021 04:00 PM