பிரபல தென்னிந்திய நடிகையான பயல் ராஜ்புட் “சண்ணா மெரெயா” என்ற பஞ்சாபி மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தெலுங்கு, தமிழ், பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.பஞ்சாபியில் இவர் நடித்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் 420  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக்கேய கும்மகொன்டா நடித்த “RX100” என்ற ஆக்ஷன் திரைப்படத்தில்  பயல் ராஜ்புட் கதாநாயகியாக நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர்ஹிட்டான RX100 திரைப்படத்திற்குப் பிறகு பயல் ராஜ்புட் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து சில திரைப்படங்களுக்கு குத்துப் பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை  ரசிகர்களை ஈர்த்தார். 

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான வெங்கடேஷ் மற்றும் நாக சைதன்யா இணைந்து நடித்த வெங்கி மாமா திரைப்படத்திலும் பயல் ராஜ்புட் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தமிழில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஏஞ்சல் திரைப்படத்திலும் பயல் ராஜ்புட் நடித்து வருகிறார். விரைவில் ஏஞ்சல் திரைப்படம் வெளிவர உள்ள நிலையில் நடிகை பயல் ராஜ்புட் தெலுங்கு பிக் பாஸ்  சீசன் 5 இல் கலந்து கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. 

எனவே இது பற்றிய உண்மையை நடிகை பயல் ராஜ்புட் என்று போட்டுடைத்தார். பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்ட நடிகை பயல் ராஜ்புட் “நான் கட்டாயமாக தெலுங்கு பிக்பாஸ் 5-ல் கலந்து கொள்ளவில்லை. இது முழுக்க முழுக்க தவறான செய்தி. தயவுசெய்து இந்த வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம்” என பதிவிட்டுள்ளார். சமீபகாலமாக பயல் ராஜ்புட் பிக் பாஸ் 5 களமிறங்க உள்ளதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் அது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது பயல் ராஜ்புட் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.